தமிழக அரசின் அலட்சியத்தாலே விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு வழங்கும் நிதியை கூட பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புவதாகவும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்துள்ளதாக தெரிவித்தார்.தமிழக அரசின் அலட்சியத்தாலே விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு வழங்கும் நிதியை கூட பயன்படுத்தாமல் தமிழக அரசு திருப்பி அனுப்புவதாகவும் சாடினார்.
வருவாய் ஈட்டுவதில் முதலிடத்தில் உத்தரபிரதேசம், கடன் வாங்குவதில் முதலிடத்தில் தமிழகம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திமுக அரசு பொறுப்பு ஏற்றதிலிருந்து 6,700 கொலைகள் நடைபெற்று உள்ளதாகவும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
















