நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 60 % நெல் கொள்முதல் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
18 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து இருக்க வேண்டும் என்றும், ஆனால் 5.5 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“ஏரி, குளம் போன்றவற்றை தூர்வாரி நீர் வெளியேற திமுக அரசு வழிவகை செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
“இதுகுறித்து தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தை ஏன் வாயை திறக்கவில்லை என்றும் அன்புமணி கேள்வி எழுப்பினார்.
















