செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக அறுவடை செய்யப்பட்ட நெற்கள் மழையில் நனைந்து ஈரப்பதமாக உள்ளன. இதனால் நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
அதன்படி தமிழகத்துக்கு 3 குழுக்களை மத்திய உணவுத்துறை அனுப்பியுள்ளது. இந்தநிலையில் செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மத்திய குழு அதிகாரிகளை, மாவட்ட ஆட்சியர் சினேகா பூங்கொத்து அளித்து வரவேற்றார்.
இதையடுத்து கீரப்பாக்கம், ஓரகடம் பகுதிகளில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு சென்ற மத்திய குழுவினர், அங்கு வைக்கப்பட்ட நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனர்.
















