நாமக்கல்லில் செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பாக மத்திய குழுவினர் தனியார் ஆலையில் ஆய்வு செய்தனர்.
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்துமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. மேலும் மத்திய அரசின் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் தொடர்பான அனுமதிக்காக காத்திருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழுவினர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினர் ஆய்வு செய்தனர்.
இம்மாதத்தில் பொது விநியோக திட்டத்திற்கு எவ்வளவு அரசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது?, செறிவூட்டப்பட்ட அரிசி எவ்வளவு உள்ளது என்பது குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
















