சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமானது தொடர்பாக சென்னை அம்பத்தூரில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.
சபரிமலை ஐயப்பன் கோயில், துவாரபாலகர்கள் சிலையில் இருந்து தங்கம் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பராமரிப்பு பணிகளுக்காக துவாரபாலகர்கள் சிலைகளில் இருந்து தங்க தகடுகள் கழற்றப்பட்டு, மீண்டும் பொருத்திய போது, 4 கிலோ அளவுக்கு தங்கம் மாயமானதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த, கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது. விசாரணையில் இறங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர், துவாரபாலகர்கள் சிலைகளின் தங்க தகடுகளுக்கான பராமரிப்பு செலவை ஏற்ற, பெங்களூரை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் அதிகாரி முராரி பாபு ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில், ஐயப்பன் கோயிலில் மாயமான தங்கம் குறத்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஸ்மார்ட் கிரியேஷன் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்திய சிறப்பு புலனாய்வு குழுவினர், தலைவர் பங்கஜ் பந்தாரியிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
இதனிடையே ஐயப்பன் கோயில் துவாரபாலகர்கள் சிலையில் இருந்து திருடப்பட்ட தங்கத்தின் ஒரு பகுதியை கர்நாடக மாநிலம் பல்லாரியை சேர்ந்த நகை வியாபாரியிடம் இருந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் மீட்டுள்ளனர்.
















