இஸ்தான்புல் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஆப்கானிஸ்தானுடன் வெளிப்படையான போரை நடத்துவோம் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்த சண்டையில் பலர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இதனை அடுத்து, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் பிரதிநிதிகள் தோஹாவில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கத்தார் மற்றும் துருக்கி நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட்ட நிலையில், இருநாடுகளுக்கு இடையேயான 48 மணி நேர போர் நிறுத்தம் கையெழுத்தானது.
கடந்த 24ஆம் தேதி மாலையுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில், பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து, இஸ்தான்புல்லில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையேயான அமைதி பேச்சவார்த்தை நடைபெற்றது.
இதனிடையே, அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஆப்கானிஸ்தானுடன் வெளிப்படையான போரை நடத்துவோம் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
















