குஜராத்தில் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் “திரிசூல்” என்ற பெயரில் முப்படைகள் சார்பில் ராணுவ பயிற்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குஜராத்தின் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள “சர் க்ரீக்” என்ற இடத்தில் வரும் 30ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை முப்படைகளின் சார்பில் ராணுவ பயிற்சி நடத்த உள்ளதாகவும் அதற்கு “எக்ஸ் திரிசூல்” எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதில் ராணுவம், விமானப்படை, கடற்படையை சேர்ந்த 30 ஆயிரம் வீரர்கள பங்கேற்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள், போர்க்கப்பல்கள், ஆயுதங்களை பயன்படுத்தி போர் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பயிற்சி நடைபெறும் நாளில் குறிப்பிட்ட இடத்தின் வழியாக விமானங்கள்பறக்கக் கூடாதென உத்தரவிடப்பட்டுள்ளது.
















