கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் 1995ஆம் ஆண்டு அதிமுக சார்பில் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலையின் இடது கையை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதனை அறிந்த அதிமுக மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் மற்றும் அதிமுக தொண்டர்கள் அப்பகுதியில் திரண்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, எம்ஜிஆர் சிலையைச் சேதப்படுத்திய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
















