தாய்லாந்தின் ராஜமாதாவான சிரிகிட் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது அந்நாட்டு மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தாய்லாந்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரான பூமிபால் அதுல்யதேஜின் மனைவியான சிரிகிட் அந்நாட்டின் ராஜமாதாவாக இருந்து வந்தார்.
இவர் கடந்த 17ம் தேதி முதல் ரத்த தொற்றால் பாதிக்கப்பட்டு, பாங்காக்கில் உள்ள சுலாலோங்கார்ன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் ராஜமாதா சிரிகிட் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் இறுதிச் சடங்குவரை பாங்காக்கில் உள்ள கிராண்ட் பேலஸில் வைக்கப்பட உள்ளது.
தாய்லாந்தில் கிராமப்புற மேம்பாடு, பெண்களின் கைவினை தொழில்களுக்கு உதவுதல், சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகளைச் சிரிகிட் மேற்கொண்டு வந்தார். அவரது மறைவு அந்நாட்டு பெண்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
















