திருச்சி அருகே சொகுசு ஆம்னி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்தனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து பெங்களூருக்கு 31 பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து புறப்பட்டுச் சென்றது.
திருச்சி மாவட்டம், சிலையாத்தி அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
படுகாயமடைந்த 21 பேர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















