திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதையொட்டி, திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
கடந்த 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
இந்நிலையில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சியையொட்டி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகம் முழுவதில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
















