சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே தட்டான்குளம் கிராமத்தில் 5 நாட்களாக மின்சாரமின்றி தவித்து வருவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தட்டான்குளம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், கனமழை காரணமாகத் தென்னை மட்டைகள் விழுந்ததில் மின்கம்பிகள் சேதமடைந்துள்ளன.
இதனால், கடந்த 5 நாட்களாக மின்சாரமின்றி தவித்து வருவதாகவும், பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தியில் படித்து வருவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.
















