கரூர் துயர சம்பவம் தொடர்பாகத் தவெக தலைவர் விஜயை கண்டித்து பார்வையற்ற நபர் பொதுமக்கள் முன்னிலையில் தான் எழுதியை கவிதையை வாசித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்ற நபர் கொளஞ்சிநாதன், அரியலூர் ரயில் நிலையத்தில் பயணிகள் முன்னிலையில், கரூர் துயர சம்பவம் தொடர்பாகக் கவிதை ஒன்றை வாசித்தார்.
அதில் கரூர் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகளை இதுவரை நாடு கண்டதில்லை எனவும், இந்தச் சோகம் அனைவரின் இதயத்தைவிட்டு இன்னும் அகலவில்லை எனவும் குறிப்பிட்டார்.
மேலும் உயிரிழந்த குடும்பத்தினரின் வீடுகளுக்குச் செல்லாமல், நடிகர் விஜய், நேரில் வரவழைத்து ஆறுதல் கூற உள்ளது வருந்தத்தக்கது என அவர் தனது கவிதையில் தெரிவித்துள்ளார்.
















