இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் பாராகிளைட் திருவிழா தொடங்கியதால் ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
சிம்லா அருகே உள்ள ஜுங்காவில் 4 நாள் பறக்கும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 3வது சர்வதேச சிம்லா பறக்கும் விழா மற்றும் விருந்தோம்பல் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
4 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் ஏழு நாடுகளைச் சேர்ந்த 15 பேர் உட்பட சுமார் 59 பாராகிளைடர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
















