தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தைப் பயன்படுத்தி, ஊருக்குள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விளாத்திகுளம் அடுத்த கீழக்கல்லூரணியில் தீபாவளிக்கு சரிவரப் பேருந்துகள் இயக்கப்படாததை கண்டித்து ஊர்மக்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் கிராமமே வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நேரத்தைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திய சிலர், ராமலட்சுமி என்பவரின் வீட்டில் புகுந்து 10 சவரன் நகையைக் கொள்ளையடித்தனர்.
பின்னர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
















