தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற அச்சத்தில், 41 பேரின் குடும்பங்களை நேரில் வரவழைத்து விஜய் ஆறுதல் கூறியிருக்கலாமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர்களின் 224வது குருபூஜை விழா நடைபெற்றது.
இதையொட்டி அங்குள்ள நினைவிடத்தில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் பேரவை தேர்தலில், தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சியமைப்பது உறுதி எனக் கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்தபின்பு பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் நான்கரை ஆண்டுகளில் 53 சதவீத போக்சோ குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
















