சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் எட்டாவது மாநாட்டை டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார்.
டெல்லியில் 4 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 124 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், வெளிநாடுகளை சேர்ந்த 40 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். உலக நாடுகளிடையே சூரியசக்தி பயன்பாட்டை மேலும் அதிகரிப்பது குறித்து சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
சூரியசக்தியின் பயன்பாடு அனைத்து மக்களுக்கும் மலிவு விலையில் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் சூரிய சக்தியை அதிகளவில் பயன்படுத்தும் 3வது நாளாக இந்தியா திகழ்வது குறிப்பிடத்தக்கது.
















