சென்னையில் 9 வயது சிறுமியை தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூவிருந்தவல்லி நகராட்சி 13வது வார்டுக்கு உட்பட்ட மகாலட்சுமி நகரில் வசிக்கும் யாஸ்மின் என்பவரின் மகளை, அங்குள்ள தெருநாய்கள் துரத்தி துரத்தி கடித்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மகாலட்சுமி நகரின் 5வது தெருவில் வசிக்கும் யாஸ்மினையும், அவரது 9 வயது மகள் சமீராவையும் 2 தெருநாய்கள் விரட்டி விரட்டி கடித்ததில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் அப்பகுதியில் சைக்கிளில் செல்லும் சிறுவனை தெருநாய் விரட்டி கடிக்கும் சிசிடிவி காட்சியும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
















