தமிழக விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய ரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 6 புள்ளி 94 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவையும், 1 புள்ளி 93 லட்சம் மெட்ரிக் டன் டிஏபி உரங்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், 1 புள்ளி 88 லட்சம் மெட்ரிக் டன் எம்ஓபியையும், 5 புள்ளி 15 லட்சம் மெட்ரிக் டன் என்பிகே காம்ப்ளக்ஸ் உரங்களையும் விரைந்து வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
















