அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அரசு, இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளை அந்நியப்படுத்துவதாக அந்நாட்டு முன்னாள் வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபராகக் கடந்த ஜனவரி மாதம் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அன்றிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக, இந்தியா, சீனா, பிரேசில், கனடா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதலாக வரி விதித்துள்ளார்.
இதுகுறித்து பள்ளி நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ, இந்தியாவுடனான உறவில் டிரம்ப் நிர்வாகம் பெரிய தவறைச் செய்வதாகவும், இது நமது அனைத்து நட்பு நாடுகளையும் கோபப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்கா தான் முதலில் என்பது ஒருபுறம் இருந்தாலும், அமெரிக்கா தனியாக இருப்பது ஒரு பேரழிவை தரும் கொள்கையாகும் என்றும் எச்சரித்த ரைமண்டோ, எல்லாவற்றையும் அமெரிக்காவில் தயாரிக்க வேண்டும் என்ற கருத்தில் தனக்கு உடன்பாடில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
















