ChatGPT உடன் தற்கொலை எண்ணங்களுடன் லட்சக்கணக்கான மக்கள் உரையாடுகின்றனர் என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.
இன்றைய இளைய தலைமுறையினரிடம் சிறிய விஷயங்களுக்கே தற்கொலை செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.
இதை மெய்ப்பிக்கும் வகையில் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI அதிர்ச்சியூட்டும் தரவுகளை வெளியிட்டுள்ளது.
அதில் ChatGPT-ஐ பயன்படுத்தும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் ஒவ்வொரு வாரமும் தற்கொலை எண்ணங்களைப் பற்றி விவாதித்து வருவதாகவும், இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
















