அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட புளூட்டோனியம் ஒப்பந்தத்தை ரத்து செய்து ரஷ்யா அதிர்ச்சி அளித்துள்ளது.
கடந்த 2000-ம் ஆண்டில் அமெரிக்கா – ரஷ்யா இடையே புளூட்டோனியம் மேலாண்மை குறித்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
2010-ம் ஆண்டு திருத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் படி, ரஷ்யா தனது கையிருப்பில் உள்ள 34 மெட்ரிக் டன் புளூட்டோனியத்தை அணு ஆயுதங்களை தயாரிக்க பயன்படுத்தக்கூடாது.
இவற்றை அணுமின் உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
கடந்த 2016-ம் ஆண்டு இடைநிறுத்தி வைக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் தற்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் ரஷ்யா தடையின்றி அணு ஆயுதங்கள் தயாரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 
			 
                    















