வாக்காளர் பட்டியல் திருத்தம் வரவேற்கத் தக்கது என பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.
SIR விவகாரம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,
வாக்காளர் பட்டியல் திருத்தம் வரவேற்கத் தக்கது என தெரிவித்தார். எந்த ஒரு வாக்காளர் பெயரும் விடுபட்டு விடக்கூடாது என கூறிய அவர், இறந்தவர்களின் வாக்குகள் நீக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
















