சென்னை அசோக் நகரில் பெண்ணுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நபரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞர், சென்னை அசோக் நகரில் பெண் ஒருவருடன் காரில் அமர்ந்து பேசியுள்ளார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பிரகாஷை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















