தனது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் கேட்ச் பிடித்தபோது கிழே விழுந்த ஷ்ரேயாஸ் ஐயரின் விலாப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
பின்னர், ஸ்கேன் செய்தபோது விலா எலும்பையும் தாண்டி மண்ணீரலில் கீறல் ஏற்பட்டு ரத்தக்கசிவு உருவானது கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து, சிட்னியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
பின்னர், அபாயக்கட்டத்தை தாண்டிய ஷ்ரேயாஸ் அய்யர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தனது உடல்நிலை குறித்து ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், தனது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
















