முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? - அண்ணாமலை கேள்வி!
Oct 30, 2025, 09:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? – அண்ணாமலை கேள்வி!

Web Desk by Web Desk
Oct 30, 2025, 07:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சர் ஸ்டாலின் அரசின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக, அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் கொடுமையும், திமுக ஆட்சியில்தான் நடந்தேறுகிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

தமிழகப் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், கடந்த ஆண்டுகளை விட மிகவும் அதிகரித்திருப்பதாக, மத்திய கல்வித் துறை அமைச்சகம் UDISE+ அறிக்கை வெளியிட்டுள்ளது.

கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது இந்த திமுக அரசு. 2020-21ல் தொடக்கப்பள்ளிகளில் 0.6 சதவிகிதமாக இருந்த இடைநிற்றல் விகிதம் இன்று 2024-25ல் 2.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

அதுபோல, உயர்நிலைப் பள்ளிகளில் 6.4 சதவிகிதத்திலிருந்து 8.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தனியார் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் மும்மொழிக் கல்வி உள்ளிட்ட வாய்ப்புகள், ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளில் எங்கும் நடைபெறாத மாணவர்களிடையேயான ஜாதிய மோதல்கள், தமிழக அரசுப் பள்ளிகளில் மட்டுமே நடக்கின்றன. கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட, பல மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில், கட்டிடமே இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடத்துவதும், திமுக கட்சிக்காரர்கள் கட்டும் தரமற்ற பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழுவதும், அரசுப் பள்ளிகளை அவல நிலையில் தள்ளியிருக்கின்றன என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, முதலமைச்சர் ஸ்டாலின் அரசின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக, அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் கொடுமையும், திமுக ஆட்சியில்தான் நடந்தேறுகிறது. மேலும், தமிழகத்தில் 3,671 பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே பணியிலிருக்கிறார்.

இதே காலகட்டத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 2.39 லட்சமாக இருக்கையில், தனியார் பள்ளிகளில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக, 5.26 லட்சம் மாணவர்கள் சேர்கின்றனர்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை நிலைமை இப்படி இருக்க, வீண் விளம்பரம் செய்து, தங்களுக்குத் தாங்களே பாராட்டு விழா நடத்தி நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags: When will the Chief Minister and the Minister of School Education wake up? - Annamalai QuestionDMKbjp k annamalaiMK Stalintn school
ShareTweetSendShare
Previous Post

நகராட்சி நிர்வாகப் பணி நியமனங்களில் ஊழல் : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எல். முருகன்

Next Post

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் : இந்த ஆண்டு முதல் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும் – அமித்ஷா

Related News

புது நம்பிக்கையை ஏற்படுத்திய டிரம்பின் அறிவிப்பு : வர்த்தக ஒப்பந்தத்தை எச்சரிக்கையுடன் அணுக இந்தியா திட்டம்!

ரஃபேல் விமானத்தில் இந்திய விமானி சிவாங்கி சிங்குடன் தோன்றிய குடியரசு தலைவர் : பாக்., பொய் பிரசாரத்திற்கு நேரடியாக பதிலடி கொடுத்த இந்தியா!

தீவிர சூறாவளியாக சுழன்றடித்த “மெலிசா” : வலுவடைய காரணமாக இருந்த காரணிகள் என்னென்ன?

43 ஆண்டுகளை அமெரிக்க சிறையில் கழித்த இந்திய வம்சாவளி நபர் : சுதந்திர காற்றை சுவாசிக்க தொடரும் சட்ட போராட்டம்!

உலகை உறையவைத்த அதிரடி தாக்குதல் : ரத்தக்களரியான ரியோ – வீதியெங்கும் பிணக் குவியல்!

தெய்வீக திருமகனார்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பச்சைவாழியம்மன் கோவில் ஆக்கிரமிப்பு : சேகர் பாபு விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் : இந்த ஆண்டு முதல் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும் – அமித்ஷா

முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? – அண்ணாமலை கேள்வி!

நகராட்சி நிர்வாகப் பணி நியமனங்களில் ஊழல் : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எல். முருகன்

திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி : நயினார் நாகேந்திரன்

17 குழந்தைகளை கடத்தி பணய கைதிகளாக வைத்திருந்த நபர் என்கவுன்டரில் உயிரிழப்பு!

போக்குவரத்து தொழிலாளர்களை மிரட்டிப் பணம் கேட்கும் திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் கிளை செயலாளர்!

டிரம்ப்புடன் தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளேன் – சீன அதிபர்

ஒரே காரில் பயணித்த ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies