புது நம்பிக்கையை ஏற்படுத்திய டிரம்பின் அறிவிப்பு : வர்த்தக ஒப்பந்தத்தை எச்சரிக்கையுடன் அணுக இந்தியா திட்டம்!
Mar 15, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புது நம்பிக்கையை ஏற்படுத்திய டிரம்பின் அறிவிப்பு : வர்த்தக ஒப்பந்தத்தை எச்சரிக்கையுடன் அணுக இந்தியா திட்டம்!

Murugesan M by Murugesan M
Oct 31, 2025, 10:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவித்துள்ள நிலையில், அதிக சுங்க வரிகளால் சிரமப்பட்டு வந்த இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது. அதே நேரத்தில் டிரம்பின் விவகாரமான வர்த்தக கொள்கைகளை மனதில் வைத்து அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை இந்தியா கூடுதல் எச்சரிக்கையுடன் அணுகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விரிவாக விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு.

தென்கொரியாவின் க்யோங்ஜூவில் நடைபெற்ற ஏபெக் தலைமை செயல் அதிகாரிகள் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார். அப்போது பேசிய டிரம்ப், பிரதமர் மோடியை தான் மிகவும் மதிப்பதாகவும், விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது என்றும் அறிவித்தார்.

அவரது இந்த அறிவிப்பு 50 சதவீத வரிச்சுமையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த இந்திய வணிகர்களின் மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுடனான இந்தப் புதிய வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியா மீதான சுங்க வரிகள் 15 சதவீதம் வரை குறைக்கப்படலாமென தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது இந்தியாவின் மருந்துத் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நெசவு உள்ளிட்ட துறைகளுக்குப் பெரிய ஆதரவாக அமையும் எனவும், அமெரிக்க சந்தையில் மீண்டும் போட்டித்தன்மையை பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், அதிபர் டிரம்பின் வர்த்தக கொள்கைகள் பெரும்பாலும் கணிக்க முடியாததாக இருந்துள்ளது. அவர் சுங்க வரிகளை பொருளாதார கருவியாக மட்டுமின்றி, அரசியல் ரீதியாக வெளிநாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கப் பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக அவர் இந்தியா மீதான சுங்க வரியை அதிகரித்தார். அத்துடன் இந்தியா – பாகிஸ்தான் போரை சுங்க வரி மிரட்டலின் மூலம் நிறுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார்.

இவை அனைத்தும் வர்த்தக ஒப்பந்தங்களைக் கூட அதிபர் டிரம்ப் அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்தலாம் என்பதை காட்டுவதால் அவரது அறிவிப்பு ஒருவித கவலையையும் எழுப்பியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் அமெரிக்காவுடனான ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது, எதிர்காலத்தில் புதிய சுங்க வரிகள் விதிக்கப்படமாட்டாது என்ற உறுதியை பெறுவது இந்தியாவிற்கு அவசியமாகிறது.

இதனை மனதில் வைத்தே ஒப்பந்தத்தில் பாதுகாப்பு விதி ஒன்றை சேர்க்குமாறு இந்தியா கோரியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பின் புதிய சுங்க வரிகள் விதிக்கப்படும் பட்சத்தில் இருதரப்பும் அதனை மறுபரிசீலணை செய்யவோ அல்லது உரிய இழப்பீடு வழங்கவோ வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய ஏற்பாடுகள் உலகளாவிய வர்த்தக ஒப்பந்தங்களில் வழக்கமானவை என்றாலும், இது தற்போதைய சூழலில் தொழில் முதலீட்டாளர்களுக்கு நீண்டகால நம்பிக்கையை வழங்க வல்லதாகப் பார்க்கப்படுகிறது.

மற்றொருபுறம் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தின் பிறகும் அதிபர் டிரம்ப் புதிய சுங்க வரிகளை விதித்திருக்கும் நிலையில், எழுத்துப்பூர்வ உடன்பாடுகளும் அவரின் மாற்றமுள்ள வர்த்தக கொள்கைகளை முழுமையாகத் தடுக்காது என்பதை இந்தியா உணர்ந்து செயல்படும் என வெளியுறவுத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், இந்தியா – அமெரிக்கா இடையேயான வருங்கால ஒப்பந்தம் இருநாடுகளின் வர்த்தக உறவில் ஒரு புதிய உயிர் ஊட்டக்கூடிய முன்னேற்றமாகப் பார்க்கப்பட்டாலும், டிரம்பின் தனித்துவமான எதிர்பார்க்க முடியாத வர்த்தக கொள்கை முடிவுகள் அமெரிக்க சந்தையில் இந்தியாவுக்கு பெரும் சவாலாக விளக்கும் என்பதையும் மறுக்க முடியாது.

Tags: Trump's announcement that has given new hope: India plans to approach trade deal with cautionஅமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்IndiaDonald Trump
ShareTweetSendShare
Previous Post

உலகை உறையவைத்த அதிரடி தாக்குதல் : ரத்தக்களரியான ரியோ – வீதியெங்கும் பிணக் குவியல்!

Next Post

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர்தூவி மரியாதை!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies