டிரம்ப்புடன் தொடர்ந்து பணியாற்றத் தயாராக உள்ளதாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, சீனா மீது அதிக வரி விதித்து வர்த்தக போரைத் தொடுத்து வந்தார்.
இதற்குச் சீனாவும் பதிலடி நடவடிக்கையாக வரி விதிப்பை மேற்கொண்டது. இந்நிலையில் ஆசியான் மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், தென்கொரியாவின் புசான் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பேசிய ஜி ஜின்பிங், உலகின் 2 முன்னணி பொருளாதாரங்களுக்கு இடையே அவ்வப்போது உராய்வுகள் இருப்பது இயல்பு என்றார்.
இருப்பினும் இரு நாடுகளின் வளர்ச்சிக்கு ஒரு நல்ல சூழலை உருவாக்க டிரம்புடன் தொடர்ந்து பணியாற்றத் தயாராக உள்ளதாகவும் ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
















