திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 17 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
காட்டூரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர், பட்டா மாறுதல் தொடர்பாக விஏஓ ஜெய்குமாரை அணுகியுள்ளார்.
அதற்கு அவர் 17 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விஏஓ ஜெயக்குமாரிடம், ராமமூர்த்தி கொடுத்துள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், விஏஓவை கையும் களவுமாகக் கைது செய்தனர்.
 
			 
                    















