நெல்லையில் சாலையில் சென்ற பசு மாட்டைத் தாக்கி கல்லை போட்டு இருவர் கொலை செய்த வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் குறிச்சி பகுதியில் சாலை ஓரத்தில் மதுபோதையில் நடந்து சென்ற இருவரை, அங்கிருந்த பசுமாடு முட்டுவது போல் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த இருவரும் பசு மாட்டைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் அருகிலிருந்த கல்லை எடுத்து மாட்டின் மீது தூக்கி வீசிக் கொலை செய்துள்ளனர்.
இது குறித்த வீடியோ வெளியான நிலையில், இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
			 
                    















