பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என என்ஐஏ தகவல் தெரிவித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட் பொறுப்பேற்றது.
இதில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், காஷ்மீரை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தப்படுகிறது.
அனைத்து விசாரணையும் முடிவடைந்த நிலையில், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என என்ஐஏ கூறியுள்ளது.
 
			 
                    















