கேலி செய்த ஆஸ்திரேலிய ரசிகருக்கு, இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
மகளிர் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மைதானத்தில் இந்திய ரசிகர்களைப் பார்த்து ஆஸ்திரேலிய ரசிகர் ஒருவர் கேலி செய்தார்.
அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ரசிகர்கள் சாண்ட் பேப்பர், சாண்ட் பேப்பர் எனக் கத்தி கூச்சலிட்டனர்.
சாண்ட் பேப்பர் கேட் என்பது 2018ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராஃப்ட் பந்தை சாண்ட் பேப்பர் கொண்டு வேண்டுமென்றே சேதப்படுத்திய ஒரு ஊழலாகும்.
எனவே இதனை அந்த ரசிகருக்கு நினைவுபடுத்தும் வகையில் இந்திய ரசிகர்கள் சாண்ட் பேப்பர் என முழக்கமிட்டனர். இந்த் சாண்ட் பேப்பர் முழக்கம் அரங்கத்தை நிரப்பியபிறகு, அந்த ரசிகர் அமைதியடைந்தார்.
 
			 
                    















