உத்தரபிரதேச மாநிலம் காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாயத்தால் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட சத்திரத்தை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
உத்தரபிரதேசத்தின் காசி நகரில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாயத்தால் 10 மாடிகள் கொண்ட பிரமாண்ட சத்திரம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த சத்திரத்தினை குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாயத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.
















