கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு ஒரு தனி நபரை மட்டுமே காரணமாக சொல்ல முடியாது என்று நடிகர் அஜித்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் மேற்கொண்ட போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இச்சம்பவம் தொடர்பாக பேட்டியளித்த நடிகர் அஜித்குமார், கரூர் கூட்ட நெரிசலை வைத்து தமிழ்நாட்டில் நிறைய நடந்து விட்டது, கரூர் சம்பவத்திற்கு விஜய் மட்டும் பொறுப்பு அல்ல என்றும், நாம் எல்லோருமே பொறுப்பு எனவும் கூறியுள்ளார்.
















