சென்னை கோயம்பேட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபடும் பெண்ணின் வீடியோ வெளியாகியுள்ளது.
திருவொற்றியூரை சேர்ந்த ஞானவேல், ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். தி.நகரில் சவாரிக்காக நின்றுகொண்டிருந்த ஞானவேலை அணுகிய இருவர், பாடி செல்ல வேண்டுமென கூறி ஆட்டோவில் ஏறியுள்ளனர். ஆனால் பாடி வந்த பிறகும் ஆட்டோவில் இருந்து இறங்காத இருவரும் கோயம்பேடு செல்ல வேண்டுமென கூறியுள்ளனர்.
இதையடுத்து கோயம்பேடு செல்லும் வழியில் இருவரும் பீர் குடித்தவாறு ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர். கோயம்பேடு சென்றடைந்த பின்னர் இருவரையும் ஆட்டோவில் இருந்து இறங்குமாறு ஞானவேல் கூறியுள்ளார்.
அப்போது, ஞானவேலை ஆபாசமாக பேசிய ஆட்டோவில் பயணித்த பெண், வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இதையடுத்து, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, சம்மந்தப்பட்ட பெண, பாடியை சேர்ந்த ரேவதி என்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் பெண்ணின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
















