அதிமுக பிளவுபடக்கூடாது என்பதற்காக இரு முறை வந்த வாய்ப்பை விட்டுக்கொடுத்தேன் என கட்சியில் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம் ஜி ஆர் உடன் பயணித்து உறுப்பினராக மட்டுமில்லாமல் செயல் வீரராக பணியாற்றினேன் என தெரிவித்தார்.
அடுத்ததாக அம்மா வழியில் நான் இரவு பகலாக பணியாற்றினேன் என்றும், அம்மாவின் மறைவிற்கு பிறகு இயக்கம் உடையக் கூடாது என இரு முறை வாய்ப்பு வந்த போதிலும் அதனை விட்டுக்கொடுத்தேன் என்றும் தெரிவித்தார்.
பல்வேறு சூழலில் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது என்றும், எம் ஜி ஆர் தோல்வியே சந்தித்தது இல்லை என்றும், ஜெயலலிதா ஒரு முறை தோல்வி கண்டாலும் பின்னர் வராலாற்று வெற்றி படைத்தாகவும் அவர் கூறினார்.
ஒரு இயக்கம்.என்பது பல கோடி தொண்டர்களை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், அனைவரையும் ஒருங்கிணைத்தால் வெற்றி கிட்டும் என்பது மக்களின் எண்ணம் என்றும் அவர் தெரிவித்தார்.
இயக்கம் ஒன்று சேர வேண்டும் என்பதே விருப்பம் என்றும் செங்கோட்டையன் கூறினார். தான் திமுக பி டீமில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்தற்காக வருந்துகிறேன் என்றும் கண்ணீர் சிந்துகிறேன் என்றும் அவர் குறிபிட்டார். இரவு முழுவதும் தூங்கவில்லை என்றும், மிகவும் வருத்தத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
எந்த வித விளக்கமும் கேட்காமல் தாம் நீக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுபேன் என்றும் அவர் கூறினார்.
















