இந்தியாவின் முதல் தீவிர வறுமை இல்லாத மாநிலமாகக் கேரளா அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வறுமையை முழுமையாக அகற்றுவதற்காகக் கடந்த 2021-ம் ஆண்டு அம்மாநில அரசுச் சிறப்புத் திட்டத்தை கொண்டு வந்தது.
அதன்படி கேரளாவில் 64 ஆயிரத்து 6 குடும்பங்கள் மிக மிக வறுமையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களில் சுமார் 4 ஆயிரம் பேருக்குப் புது வீடுகளும், 1300 பேருக்கு நிலமும், 5700 பேருக்கு வீடுகளைப் புதுப்பிக்க தலா 2 லட்சம் ரூபாயும், 1 லட்சத்து 4 ஆயிரம் பேருக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.
இந்த நடவடிக்கைகள்மூலம் அந்த 64 ஆயிரம் குடும்பங்களும் தற்போது ஓரளவு வாழ்வாதாரத்தை பெற்று முன்னேறி உள்ளன.
இந்நிலையில் கேரளாவின் மாநில அமைப்புத் தினத்தை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் சட்டசபை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், இந்தியாவின் முதல் தீவிர வறுமை இல்லாத மாநிலமாகக் கேரளாவை அறிவித்தார்.
இந்த அறிவிப்பை அரசின் முழுமையான மோசடி எனக்கூறி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, சட்டசபை கூட்டத்தைப் புறக்கணித்தது.
















