அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் காற்று மாசு குறைந்து வருவதாக, டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் டெல்லி அரசு, டெல்லி மாநகராட்சி, டெல்லி மேம்பாட்டு ஆணையம், டெல்லி மாநில தொழிற்துறை உள்கட்டமைப்பு மேம்பாடு கழகம் ஆகியவை, காற்று மாசை கட்டுப்படுத்த இரவு பகல் பாராமல் பணியாற்றி வருவதாகக் கூறினார்.
இதனால் காற்று மாசு படிப்படியாகக் குறைந்து, காற்றின் தரக்குறியீட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆம் ஆத்மி தலைவர்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
















