தஞ்சையில் ஏற்பட்டுள்ள நெல் பாதிப்பு, ஆளும் அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு சான்று எனப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாகத் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்
கும்பகோணம், தஞ்சையில் நெல் பாதிப்பு இந்த ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஒரு சான்று என்றும் கும்பகோணத்தில் கோயில் கோபுரங்கள் இடிந்து விழுவதை பற்றிச் சேகர் பாபு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அடுத்த கட்சி பிரச்னை பற்றிச் சேகர்பாபு பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
மொழிவாரியாகத் திரித்து பேசுவதும், வன்மத்தை ஏற்படுத்துவதும் திமுகவின் வழக்கம் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாயாவது அரசு வழங்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.
















