தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நீர்நிலைகளின் அருகாமையில் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டடங்களை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
ஹைதராபாத்தில் நீர்நிலைகள் மற்றும் ஏரிகளைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அருகே சட்டவிரோத கட்டடங்களை அகற்றவும், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஹைதராபாத்தின் துணை நகரமான சங்கரெட்டி மாவட்டத்தின் அமீன்பூரில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டு வந்த கட்டடத்தைப் பொக்லைன் இயந்திரம் கொண்டு அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
















