பிஜெல்ஜினா ஓபன் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடைபெற்ற பிஜெல்ஜினா ஓபன் செஸ் தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம்பரிதி சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன் மூலம் இந்தியாவின் 90 ஆவது கிராண்ட் மாஸ்டர் மற்றும் தமிழ்நாட்டின் 35 ஆவது கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை அவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில் அவர் ஓமானில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து இளம்பரிதியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
















