காந்திக்கு பின் நாட்டை முழுமையாக புரிந்து கொண்ட ஒரே நபர் பிரதமர் மோடிதான் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தின விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
தொடர்ந்து மாநிலங்களின் கலாச்சாரங்கள் மற்றும் அவர்களின் வாழ்வியலை பறைசாற்றும் விதமாக கண்காட்சியும் நடைபெற்றது. இதில் பற்கேற்ற மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பரிசுகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், பாரதம் என்பது ஒற்றுமையில் இருந்தே உருவானது என தெரிவித்தார். காந்திக்கு பின் நாட்டை முழுமையாக புரிந்துகொண்ட ஒரே நபர் பிரதமர் மோடிதான் என்றும் அவர் கூறினார். மேலும் பிரதமர் மோடியின் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் அமைதியாக உள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
















