மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.
13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. 8 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை
எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது.
இந்நிலையில், நவி மும்பையில் இன்று இறுதிப்போட்டி நடைபெறுகிறது. முதல் முறையாக உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய மகளிர் அணி களமிறங்கவுள்ளது.
















