இந்தியாவின் மிகப்பெரிய சூரிய காந்தி எண்ணெய் சப்ளையராக ரஷ்யா மாறி உள்ளது.
முன்பு இந்தியாவின் மிகப்பெரிய சூரியகாந்தி எண்ணெய் சப்ளையராக உக்ரைன் திகழ்ந்து வந்தது. ஆனால், போர் சூழல், போட்டி விலை மற்றும் விநியோகம் காரணமாக உக்ரைன் அதில் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய சூரியகாந்தி எண்ணெய் சப்ளையராக ரஷ்யா உருவெடுத்துள்ளது.
அதன்படி, ரஷ்யாவில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதி பன்மடங்கு அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டில் 1.75 லட்சம் டன்னாக இருந்த ரஷ்ய சூரிய காந்தி எண்ணெய்யின் ஏற்றுமதி, 2025-ன் முதல் பாதி நிலவரப்படி 6.8 லட்சம் டன்னாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















