கள்ளக்குறிச்சியில் கடந்த ஆறு ஆண்டுகளாக வருங்கால வைப்பு நிதி தொகை வழங்காததைக் கண்டித்து தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 130 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், 2018ஆம் ஆண்டு முதல் வருங்கால வைப்பு நிதி வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், புதிய ஒப்பந்ததாரர் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 6 ஆண்டுகளாக வருங்கால வைப்பு தொகை வழங்கப்படாதைதைக் கண்டித்தும் கள்ளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர், தூய்மை பணியாளர்களைப் பணிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு தூய்மை பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர்.
















