ஏற்காடு அருகே ஊராட்சி ஒன்றிய பள்ளியின் வகுப்பறையில் மழைநீர் ஒழுகுவதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே உள்ள போட்டுக்காடு கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் என இரண்டு பேர் பணியாற்றி வருகின்றனர்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை 10க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், பள்ளி வகுப்பறை கட்டடங்கள் பாழடைந்து உள்ளதால் மழை காலங்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர்.
வகுப்பறையில் உள்ள மின் இணைப்புப் பெட்டி அமைந்துள்ள சுவர்களின் மழைநீர் கசிவதாகவும், அசம்பாவிதம் நடக்கும் முன்பு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பள்ளியைச் சீரமைக்க வேண்டும் எனவும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















