சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையத்தில் சாயக்கழிவு பட்டறை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் மற்றும் கடைகளில் கருப்பு கொடி ஏற்றிப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜாகிர் அம்மாபாளையத்தில் உருவாக்கத் திட்டமிட்டுள்ள ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட உள்ள சாயக்கழிவு ஆலைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடமும், அமைச்சர் ராஜேந்திரன், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரிடமும் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலைச் சாயப்பட்டறைகள் திறப்பு விழா காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், வியாபாரிகள் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
















