சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான காளை மாட்டையும், நான்கு கன்றுகளையும் திருடி, இறைச்சிக்காகக் கொலை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கோட்டை மாரியம்மன் கோயிலுக்குப் பக்தர்கள் தானமாகக் கொடுத்த மாடுகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்துமுன்னணி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில் கோயிலுக்குச் சொந்தமான காளை மாட்டையும், நான்கு கன்றுகளையும் திருடி, இறைச்சிக்காகக் கொலை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தர்வேஸ் மைதீன், சலீம் மற்றும் அலாவுதீன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
இதே போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாத வகையில் கோயில் மாடுகளைப் பாதுகாக்கும் வண்ணம் கோசாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
















