கன்னியாகுமரி மாவட்டத்தில் மரத்தூள் மூட்டைகளுக்கு இடையே பதுக்கி நூதன முறையில் கேரளாவுக்கு கடந்த முயன்ற இரண்டு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
புலியூர்சாலை சோதனைசாவடியில் அருமனை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டெம்போவை தடுத்து நிறுத்தியபோது ஓட்டுனர் மற்றும் உடனிருந்த நபர் தப்பி சென்றனர்.
பின்னர் டெம்போவை சோதனை செய்தபோது மரத்தூள் மூட்டைகளுக்கு இடையே ரேஷன் அரிசியை மறைத்துக் கேரளாவுக்கு கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து வாகனம் மற்றும் சுமார் இரண்டு டன் அரிசியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















