மோன்தா புயல் தாக்கம் மற்றும் காய்கறிகளின் அறுவடைக்காலம் முடிந்துள்ளதால் சென்னைக் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலைக் கணிசமாக அதிகரித்துள்ளது.
சென்னைக் கோயம்பேடு சந்தையில் இருந்து சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி வந்து விற்பனைச் செய்கின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் சென்னைக் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விற்பனைக்காகக் காய்கறிகள் வரும் நிலையில், மோன்தா புயல் தாக்கம் மற்றும் அறுவடைக் காலம் முடிந்துள்ளதால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கிலோ பீன்ஸ் 20 ரூபாய் உயர்ந்து 80 ரூபாய்க்கும், தக்காளி 40 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 60 ரூபாய்க்கும் விற்பனைச் செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
சில்லறை விற்பனையில் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கும் என்றும், விலை உயர்வு டிசம்பர் மாதம் வரைத் தொடரும் எனவும் கூறியுள்ளனர்.
மேலும், புத்தாண்டுக்குப் பிறகே காய்கறிகளின் விலை மீண்டும் குறைய வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
















